சென்னை; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக தேர்தல்அதிகரியிடம் தேமுதிக தரப்பில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில்,   தேர்தல் விதி மீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453இன் கீழ் 50 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்றும் கூறியதுடன், இதுவரை தேர்தலை ரத்து செய்யக்கோரி யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என கூறியிருந்தார்

இந்த நிலையில், பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து  செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் சென்னையில் உள்ள தலைமை  தேர்தல் அதிகாரி சாகுவிடம்  மனு அளித்துள்ளது.  ஈரோடு கிழக்கில் அதிக அளவில் பணப்பட்டுவடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடப்பதாக கூறி தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதாக பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.