கோவை,
புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேருந்து நிலையம் அருகே உள்ள கணபதி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஐயப்பன்.
கடந்த 8ந்தேதி முதல் பணம் செல்லாது என்ற அறிவிப்பால், தன்னிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். செலவுக்கு தேவையான பணம் இல்லாததால், வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு எடுத்தார்.

தற்கொலைக்கு முயன்ற ஐயப்பன்
தற்கொலைக்கு முயன்ற ஐயப்பன்

இதைத்தொடர்ந்து தனது இரு சக்கர வாகனத்தைஎடுத்துக்கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். வண்டியை விட்டு இறங்கியதும், தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து, தனது தலைமீது ஊற்றினார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் தனது குழந்தைகளுக்கு அரிசி வாங்க முடியாமல். ரேசன் அரிசி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூச்சலிட்டுக்கொண்டே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
 
தகவல் அறிந்து அங்கு வந்த வல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.