திங்கட்கிழமை கூடுகிறது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

Must read

டில்லி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (12ந்தேதி) கூடுகிறது.
 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தண்ணீர் விட மறுத்த கர்நாடக அரசை கண்டித்தும், உடனே தண்ணீர் திறந்துவிட கோரியும்   சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
1cauvery
அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு (மொத்தம் 13 டி.எம்.சி.) காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு  உத்தரவு பிறப்பித்தது.
இந்த தண்ணீர் தமிழகத்துக்கு போதுமானது அல்ல என்று தமிழக அரசு வாதிட்டதால், அதுபற்றி காவிரி கண்காணிப்பு குழுவில் மனு தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதுபோல், கர்நாடகாவும் தனது தரப்பை காவிரி கண்காணிப்பு குழுவில் மனுவாக தாக்கல் செய்யுமாறும், இருதரப்பு கருத்துகளையும் ஆய்வு செய்து கண்காணிப்பு குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து  தமிழக அரசு சார்பில் நேற்றுமுன்தினம் இரவு காவிரி கண்காணிப்பு குழுவில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரியில் தற்காலிகமாக 52 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதுபோல், கர்நாடகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்கள் அணைகளில் மொத்தமே 47 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பதால், தமிழகம் கேட்கும் அளவுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது..
இரு மாநிலங்களின் மனுக்களையும் ஆராய்ந்து தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறக்க உத்தரவிடுவது என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக, காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் 12–ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமை தாங்குகிறார்.
காவிரி பாயும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களும், மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்..
கூட்டம் முடிந்தபிறகு, காவிரி கண்காணிப்பு குழு, தனது முடிவை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யும்.  வருகிற 16–ந்தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு  விசாரணைக்கு வருகிறது. அப்போது, கண்காணிப்பு குழுவின் அறிக்கை அடிப்படையில், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிகிறது

More articles

Latest article