மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

Must read

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.
1a-radia-celphone
எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்தே இருக்கிறது. செல்போ‘ன் கலாச்சாரம் இன்று கொள்ளை நோய் போல எல்லா தரப்பு மக்களிடமும் பரவி இருக்கிறது.  இதில் நன்மைகள் நிறைய இருந்தாலும் அதன் தீமைகளையும் உணர்ந்திருப்பது நல்லது.
செல்ஃபோனில் அதிகம் பேசுவது மூளை புற்றுநோய் ஏற்படுத்தும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் செல்போன் பயன் படுத்துபவர் யாரும் அதன் ஆபத்தை இன்னும் உணரவில்லை. இன்னும் 10ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வார்கள்.
இந்த செல்போன் மின் காந்த அலைகளால் சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவைகள் இனம் அடியோடு அழிந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதே பாதிப்பு இன்னும் சில வருடங்களில் மனிதனுக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
செல்போனில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலைகளால், பேசுபவர்கள் மூளையில் கட்டிகள் வர வாய்ப்புகள் உள்ளது.  அது நாளடைவில் புற்று நோயாக மாறும் ஆபத்துள்ளது.  இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம். எனவே செல்ஃபோன் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இதன் காரணமாக செல்போன் கதிர் வீச்சு பாதிப்பிலிருந்து நம்மை ஓரளவாவது பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.
1aaa-radia-celphone
மேலும், செல்போன் கதிர்வீச்சினால், நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே, 1. நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால், போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கலாம்.
குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
உங்கள் செல்போனில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் இருக்கும்.
தூங்கும்போது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் உங்கள் தொடர்பை  attend செய்தவுடன் போனை காதருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம்.
ஏனென்றால், பேசும்போது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
செல்போனில் பேசும்போது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில்தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
செல்போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிவைத்து பேச வேண்டாம்.
உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
 

More articles

Latest article