ஆகஸ்ட் 17ல் மோகன்லால் பட ஷூட்டிங்.. திரிஷ்யம் 2 ஸ்கிரிப்ட்டுடன் யூனிட் தயார்..

Must read

மோகன்லால் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷ்யம். த்ரில்லர் படமான இது திரைக்கு வந்து பெரிய வெற்று பெற்றது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் ரீமேக் ஆனது. அதேபோல் தெலுங்கு, கன்னடத்திலும் இப்படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.

திரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் விரைவில் தொடங்கவிருப்பதாக சமீபத்தில் நடிகர் மோகன்லால் தனது 60வது பிறந்த நாளின்போது தெரிவித் தார். முதல்பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் 2ம் பாகமும் இயக்குகிறார். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். அப்பணி முடிந்து ஷூட்டிங்கிற்கு தயாராக உள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் படப் பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்பட் டுள்ளது. இதையடுத்து கேராளாவில் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. படப்பிடிப்பு பற்றி மோகன்லாலிடம் சொன்னபோது ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறாராம்.
இதையடுத்து திரிஷ்யம் 2 படப்பிடிப்புக்கான் ப்ரி புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் கடை பிடித்து படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
 

More articles

Latest article