மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் மோகன்லால்.அவரது படங்களுக்கும் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல வசூல் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
Barroz எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க 3டி-யில் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மோகன்லாலின் மகள் விஸ்மாயா இந்த படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் என செய்தி வெளிவந்துள்ளது .இந்த படத்தில் அவர் மோகன்லாலுக்கு உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளார் என கூறப்படுகிறது.
Barroz படத்தின் ஒளிப்பதிவாளராக கே.யு.மோகனன் பணியாற்ற உள்ளார் என்று கூறப்படுகிறது இவர் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega மற்றும் Rafael Amargo ஆகியோர் ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.