டுப்பி

ர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் மட்டுமே தேவை என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் கர்நாடகா மாநிலம் உடுப்பில் ஒரு இந்து மத அமைப்புக்களின் கூட்டம் நடைபெற்றது.  இதில் 2000 இந்து மத சன்யாசிகள், மடங்களின் தலைவர்கள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், ஆர் எஸ் எஸ் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.  இந்த கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “அயோத்யாவில் சர்ச்சைக்குரிய இடம் எனக் கூறப்படுவது தவறு.  அது ராமர் கோயில் இருந்த இடம்.  அங்கு ராமர் கோயில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.  இது எங்களின் நம்பிக்கை.  அதில் என்றும் மாறுதல் இருக்காது. ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை.  விரைவில் அங்கு கோயில் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் அமைப்பு, பசு பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன.