மோடியின் ஆட்சிக்கு பொருந்தும் கண்ணதாசன் பாடல்

2014 ஆம் ஆண்டு,பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்….. ” ஒரு தேவதூதன் ஆட்சி வரப் போகுது.. இனி நாட்டில் பாலாறு… தேனாறு தான்… ” என்று நாட்டின் அனைத்து ஊடகங்களும் மிகப்பெரிய ‘ ஆகாய இமேஜை ‘ ‘ பில் டப்பு’ செய்தன!

மோடியும் தன் பங்குக்கு, ” ஸ்விஸ் வங்கியில் இருந்து நேராக ‘ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குக்கும் ரூபாய் பதினைந்து லட்சம்… ‘ ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை’, ‘விவசாயிகளின் விளை பொருட்களுக்கு 50 சதவீதம் அதிக விலை’ என்று கலர் கலராக ரீல் விட்டார்!

ஆனால், இந்த ஏழு ஆண்டுகளில், வறுமையால் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை, இளைஞர்கள் வேலை இழப்பு, பணமதிப்பிழப்பால் கோடிக் கணக்கான ஏழைகள் பரிதவிப்பு.. பட்டினி என்று நாடே மோசமான சூழலில் இருக்கிறது!

இன்று கவியரசர் கண்ணதாசனின் 41 ஆவது நினைவு நாளில், அவர் எழுதிய ” ஓகோகோகோ மனிதர்களே.. ” பாடலை இன்றைய நாட்டின் நிலைக்கு மக்கள் பொருத்திப் பார்க்கிறார்கள்!

நன்றி : ஓவியர் இரா. பாரி