துரகிரி

சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைக்கோவில் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.   இந்த கோவிலை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் என அழைப்பது வழக்கமாகும்.  ஒவ்வொரு மாதமும் அமாவாசை. பவுர்ணமி,, பிரதோஷம் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக இங்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.  அவற்றில் ஒன்றாக சதுரகிரி மலைக்கோவிலுக்குப் பக்தர்கள் வர 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கோவிலுக்குக் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சொல்ல வேண்டும்,  கோவிலுக்கு வருவோர் முகக் கவ்சம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.