பிரதமராக பதவி ஏற்கும் முன்பே…. மோடியின் அடுத்த 6 மாத ஃபாரின் ‘டூர்’ அறிவிப்பு! தலைநகரில் பரபரப்பு

Must read

டில்லி:

2வது முறையாக வரும் 30ந்தேதி பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடியின் அடுத்த 6 மாதத்திற்கான வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.

மோடி இன்னும் பிரதமராக பதவி ஏற்காத நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அவரது வெளிநாட்டு சுற்றுப் பயண விவரங்களை வெளியிட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிவு நேற்றுதான் வெளியாகி உள்ளது. அதற்குள், அடுத்த மோடி வெளிநாடு செல்வது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மோடிதான் பிரதமராக மீண்டும் வருவார் என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறைக்கு எப்படி தெரியும்? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில்  48 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 92 நாடுகளுக்கு பயணமாகி உள்ளார். அதுபோல உள்நாட்டு பயணம் 328 முறை சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் மீண்டும் மோடி 2வது முறையாக ஆட்சி அமைக்கிறார். வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

அதற்குள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  அடுத்த 6 மாதம் அவர் வெளிநாடுசுற்றுப்பயணம் மேற்கொள்ள பயண திட்டங்களை வெளியிட்டு உள்ளது.

ஜூன் 13 முதல் 15 வரை கிர்கிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம். எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். 

ஜூன் 28, 29ல் ஜப்பான் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பயணம்.

 ஆகஸ்ட் இறுதியில் பிரான்ஸ் செல்கிறார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்ய பயணம்

செப்டம்பர் 3வது வாரத்தில்  அமெரிக்கா பயணம்

நவம்பர் 4ஆம் தேதி பாங்காங் செல்கிறார்.

நவம்பர் 11ஆம் தேதி பிரேசில் செல்கிறார். 

பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் பயணிப்பதற்காக பிரத்தேய வசதிகள் கொண்ட இரண்டு போயிங் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த விமானங்களை மோடி பயன்படுத்த ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

More articles

Latest article