சூரத்: நரேந்திர மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றால், சூரத் வருமான வரித்துறையின் வரி வசூலிப்பு செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில், இந்த 2018-19ம் ஆண்டில் மட்டும்தான் தனது வரிவசூல் இலக்குத் தொகையில், 20% வரை பின்தங்கியுள்ளது சூரத் வருமான வரித்துறை.

இந்த 2018-19ம் ஆண்டில் வசூலிக்க வேண்டிய மொத்த தொகையான ரூ.4,665 கோடியில், இதுவரை ரூ.3,737 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இந்தவகையில், ரூ.928 கோடியை இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.

ஆனால், கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்த வசூலாகக்ககூடிய ரூ.3,729 கோடியில், ரூ.3,615 கோடி வசூலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அதிக தொகை நிலுவையில் உள்ளது வரம்பு – 3 என்ற பிரிவுதான். இந்தப் பிரிவில்தான் சூரத் வைர வியாபாரிகள் வருகிறார்கள்.

நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கைகளால், வரி வசூல் பாதிப்பென்பது குஜராத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும்தான் என்று கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி