சென்னை:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய  மோடி, பிரதமராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக சென்னை வருகை தர உள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அவரும் தேதி விவரம் அதிகாரப்பூரவமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.