கோரக்பூர்:
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Gorakhpur.111
வரு ம் வெள்ளிக்கிழமை பாரதப் பிரதமர் மோடி,  உ.பி.யிலுள்ள கோரக்பூர்  மாவட்டத்தில்   பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று  பேச இருக்கிறார். இதன் காரணமாக இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து கோரக்பூர்-பஸ்தி பகுதிக்கு அருகில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்புப் பணிகளை  ராணுவத்தினரும், போலீசாரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், மகராஜ்கஞ்ச், சித்தார்த் நகர், சிராவஸ்தி மற்றும் நேபாளத்துடன் எல்லையைப் பகிரந்து கொள்ளும் பகுதிகளிலும் போலீசார் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.  இந்திய எல்லைக்குள் வரும் அனைவரிடமும், தேவையான அடையாளச் சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
உ.பி கோரக்பூருக்கு செல்லும் பிரதமர், அங்கு மூடிக்கிடக்கும் உரத் தொழிற்சாலையை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்வார் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கும்  அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.