மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் மோடி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

Must read

டில்லி,
த்தியஅரசு புதிய ரூ.2000   நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம். மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி என்று  காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
பழைய ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய 500ரூபாய், 2000 ரூபாயை மத்திய அரசு அறிவித்தது.
இதுகுறித்து விவாதிக்க கோரி கடந்த 4 நாட்களாக பாராளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, பாராளுமன்ற மேலவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த்சர்மா  கூறியதாவது,

காங்கிரஸ் துணைத் தலைவர் அனந்த்சர்மா
காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த்சர்மா

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப் பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியமானதாகும்.
ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை எதை யும் வெளியிட வில்லை. இந்த விஷயத்தில் சட்டப்படியான நடைமுறைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் தவறான இந்த செயல்பாட்டால் நாட்டில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை மீட்க வந்தவர் போல பிரதமர் மோடி நாடகமாடி ஏழை- எளிய மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். நாட்டில் தற்போது அறி விக்கப்படாத நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும்,  புதிய ரூபாய் நோட்டுகளை அறிவிப்பதும், வெளியிடுவதும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே சட்ட விரோதமாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வெளியிட்டு கருப்பு பணத்தை ஒழிப்பது என்பது முரணாக உள்ளது.
இதற் கிடையே கை விரலில் மை வைக்கிறார்கள். அத்தனை கட்சிகளுடனும் இணைந்து இந்த விவகாரத்தை காங்கிரஸ் பெரிதாக்கும். மக்களைத் திரட்டிப் போராடுவோம் என்று கூறினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும் பிரதமர் மோடி சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். பல முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மொத்த மாக மக்களைத் திசை திருப்ப முயல்கிறார் மோடி. மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். கறுப்புப் பண மீட்பு, தேசபக்தி என்ற பெயரில் மக்களை சிரமப்படுத்துகிறார்.
ஆனால் இந்த ஆட்சி யில் தற்போது நடப்பது போல சர்வாதிகாரிகள்  கூட செய்ய மாட்டார்கள். இது வெட்கக் கேடானது. மிகவும் வேதனையானது.
நாடு பெரும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்க பிரதமரே முழுக் காரணம் ஆவார்.  அவரே இதற்குப் பொறுப்பு.
அரசியல் சாசனச் சட்டம் 360வது பிரிவை அமல்படுத்தாமலேயே நெருக்கடி நிலையை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
ரூ-.500, ரூ-.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப் பால் ஏழைகள், விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  33 கோடி உழைக்கும் வர்க்கத்தினர் திணறியபடி உள்ளனர்.
இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார்.

More articles

Latest article