டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முந்தைய இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம்  ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில்உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளே வியக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியதில், முன்னாள் பிரதமர்களின் சிலைகள் உயிருடன் உள்ள சிலைகளைப்போல அமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்  பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்கள் எழுதிய அறிய கடிதங்கள் போன்றவைகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர்களாக பதவி வகித்த 14 பேர்  பற்றிய குறிப்புகள் இந்த மியூசியத்தல் இடம்பெற்றுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அப்போதைய பிரதமர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற அனுபவத்தை தரும் வகையில் விரர்சுவல் ரியாலிட்டியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்து முதல் டிக்கெட்டையும் பெற்று உள்ளே நுழைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு அமர்ந்து புகைப்படங்களையும், தகவல்களையும் பார்த்து மகிழ்ந்தார்.

இந்த அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி,  உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது என்றும் அந்த நம்பிக்கைக்கு உயிரூட்ட புதிய உயரங்களை நாம் அடைய வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு உருவான ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை கொண்டு சென்றதாக குறிப்பிட்டவர், இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது நாட்டுக்கும், மக்களுக்கும் பெருமை தரக் கூடியதாகும். நமது அரசியல்சாசனத்தின் சிற்பி பாபாசாஹேப் அம்பேத்கர். நமது நாடாளுமன்ற நடைமுறைகளின் அடித்தளம் அதுதான்.  இன்று திறக்கப்பட்டுள்ள  இந்த அருங்காட்சி யகம் சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்தவர் கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என ஒவ்வொரு இளைஞருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விதமாக அமையும் என்று நம்பிக்கை கொள்வதாக கூறினார்.

மத்தியில் அமைந்த ஒவ்வொரு அரசும் நமது நாடு இன்றைய நிலைக்கு உயர்வதற்காக பல்வேறு வழிகளில் உழைத்துள்ளது. இந்த நேரத்தில் இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைந்திருப்பது பொருத்தமானது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பல அருமையான தருணங்களை நமது நாடு சந்தித்துள்ளது. வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை இவை. நமது நாட்டின் பிரதமர்கள், நாட்டை பல்வேறு சவால்களிலிருந்து மீட்டு உயரத்திற்குக் கொண்டு செல்ல உதவியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு விதமான திறமையும், தகுதியும் கொண்டவர்கள். அவர்கள் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்வார்கள். இந்த பிரதமர் அருங்காட்சியகம் எதிர்கால சந்ததிகளுக்கு ஊக்க சக்தியாக அமையும்.

மேலும்,  நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அப்போதைய பிரதமர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்ற அனுபவத்தை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது எனவும் இளைஞர்கள் முடிந்தவரை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதமர், நமது நாட்டின் பெரும்பாலான பிரதமர்கள் எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்று பெருமைப்படுத்தினார்.