சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 18,716  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,58,91,265 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று  25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,188 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மேலும் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,, இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,14,933 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 230 பேர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.