பொண்டாட்டிய மறைச்ச மோடி, பணத்தையும் மறைச்சுட்டாரு!: மன்சூர் தடாலடி

Must read

ஜெய் ஆகாஷின் “அமாவாசை” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் பேசினார்.  வழக்கம்போல் ஓவர்தான்.

“பிரதமர் மோடியின் டீ மானிடேஷன் பிளானால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுபாடுகளால் தமிழ் சினிமா தத்தளிக்கிறது . அதுக்கு சினிமாக்காரங்க ஒன்று சேர்ந்து காம்பன்சேஷன் கேட்கணும் .ஆனா , எந்த நாயும் அதைக்கேட்க மாட்டேங்குது. சினிமா தொழிலாளர்களுக்கு ., பேட்டாவே செக்காதான் தர்றாங்க.

கேஷ் லஸ் இந்தியா ,பேஸ் லஸ் இந்தியா ஆயிடும்ங்கறதை யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க நாம பொண்ணுங்களுக்கு தனலட்சுமி ,பாக்கியலட்சுமி, ன்னு பேர் வைக்கிறது தனம் வீட்டிலே இல்லாம இருக்கக் கூடாது …. அப்படிங்கறதுக்காக தான்

கனிமொழி அம்மா வீட்டிலேயே கன் எடுத்துட்டு போய் மிரட்டுறான் திருடன் ….. அங்கேயும் கேஷ் லஸ்!

எல்லாத்துக்கும் காரணம் மோடிதான். பொண்டாட்டிய மறச்சி வச்சி பதவிக்கு வந்தவர் தானே… அதனால இப்போ பணத்தையும் மறைக்க பார்க்கிறாரு!

ஆயிரம் ரூபா நோட்ட பார்க்க முடியலை இரண்டாயிரம் நோட்டுக்கு சில்லறை புடிக்க முடியலை … காரணம் மோடியின் கேஷ் லஸ் இந்தியா!

மாணவர் புரட்சிக்கு சப்போர்ட் பண்ணிய மாதிரி மீடியா இந்த மாதிரி விஷயங்களையும் மக்கள் கிட்ட கொண்டு போகணும்

More articles

Latest article