சென்னை:
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி பிரதமர் மோடி வைத்தார்.

இந்த 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான விஸ்வநாதன் ஆனந்த் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த ஜோதியை இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா ஏற்றினார்கள்.

இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். நாளை முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்

பிரதமர் மோடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்கிறார் .