டெல்லி:
நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களின், பொருளாதார சூழல், கொரோனா தடுப்பு பணியில் மத்திய அரசின் செயல்பாடு, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு  தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே அறிவித்தபடி  மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த  ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்கள்  உள்பட ஜே.டி.எஸ்,  சிவசேனா; ஆர்.ஜே.டி; சிபிஐ-எம்; சிபிஐ; ஜே.எம்.எம்., எல்.ஜே.டி; NC, IUML; ஆர்.எல்.டி; ஆர்.எல்.எஸ்.பி; AIUDF, KC-M; ஆர்.எஸ்.பி; ஸ்வாபிமானி பக்ஷ்; வி.சி.கே-டி.என்; டி.ஜே.எஸ் போன்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மொத்தம் 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.