வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு…..மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் குற்றம்சாட்டின.

 

இதை மத்திய திட்டத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜிங் சிங் ஒப்புக் கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில், வேலையில்லா திண்டாட்டம் அனைத்து தரப்பிலும் அதிகரித்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் இது அதிகளவில் உள்ளது’’ என்றார்.

2013ம் ஆண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 4.9 சதவீதமாக இருந்தது. 2012ம் ஆண்டில் 4.7 சதிவீதமும், 2011ம் ஆண்டில் 3.8 சதவீதமாகவும் இருந்தது.

2011ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பு இல்லாமை 3.1 சதவீமாக இருந்தது. இது தற்போது 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: minister says unemployment rate rising in India, Modi government, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்புமத்திய அரசு ஒப்புதல்
-=-