திருச்சி,

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தி, பொதுமக்களையும், வணிகர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் மோடி தலைமையிலான அரசு ஒரு கந்துவட்டி அரசு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெரம்பலூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவர் கூறியதாவது, நூறு ரூபாய்க்கு 28 சதவீதம் வரி வசூல் செய்யும் மோடி அரசு ஒரு கந்து வட்டி அரசு என காட்டமாக கூறினார். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தி உள்ள  மோடி அரசு ஒரு கந்து வட்டி அரசாக செயல்படுவதாக வும், மோடி தான் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர் என்றும் விமர்சித்தார்.

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்காலும், நிதி பற்றாக்குறையாலும், பலவீன்மான எடப்பாடி அரசால் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்று  குற்றம் சாட்டினார்.

தற்போது சென்னை மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் நிவாரணப்பணிகளை  மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.