கொல்கத்தா

தாய் மொழியின் மூலம் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பேராசிசிர்யர் சத்யேந்திர நாத் போசின் 125 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்    அவர் தனது உரையை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் ஆற்றி உள்ளார்.  அப்போது அவர் விஞ்ஞானிகளுக்கு பல அறிவுரைகள் கூறி உள்ளார்.

மோடி தனது உரையில்,  “விஞ்ஞானிகள் அறிவியல் மீது இளைஞர்கள் மோகம் கொள்ளவும்,   விஞ்ஞானத்தை மேம்படுத்தவும்,  அறிவியல் தொடர்பை பெரும் அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.   மொழியானது எவ்விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது.    அவரவர் தாய் மொழியில்  அந்தப் பணியை செய்ய வேண்டும்.   ஏனெனில் அனைத்து மொழிகளிலும் அறிவியல் தகவல்கள் அமைய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

விஞ்ஞானிகளின் சிந்தனையானது தொழில் நுட்ப உருவாக்கத்தில் புதிய திசைகளை நோக்கி பயணிக்க உதவ வேண்டும்.    அனைத்து கண்டுபிடிப்புகளின் நாட்டின் சாதாரண மக்களுக்கும் பயந்தரும் படி அமைதல் வேண்டும்.    மத்திய அரசு இதற்காக அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறது.   சூரிய மின்சக்தி, பசுமை ஆற்றல் நீர்பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவைகளுக்காக தனித்தனி துறைகள் துவங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் “தொடங்கிடு இந்தியா மற்றும் திறன்பாடு இயக்கம்  ஆகியவைகளுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.    உயர் கல்வித்துறையை மேம்படுத்த மேலும் 20 கல்வி நிறுவனங்களை அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் மத்திய அரசு அமைத்துள்ளது

ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு மாணவருக்கு குருவாக அமைந்து மேலும் பல லட்சம் விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.    இந்திய அறிவியல் சமூகத்தினர் புதிய சவால்களை எதிர்கொண்டு அதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காண முயல வேண்டும்.    இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள்  இந்நாட்டின் போற்றுதலுக்கு உரியவர்கள்.   இஸ்ரோ நிறுவனம் இது வரை 100க்கும் மேற்பட்ட செயற்கைக் கோட்களை வானில் செலுத்தியது இந்த உலகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது”  எனக் கூறி உள்ளார்.