சென்னை: சென்னை பெல்ட்டில் இன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டிவிட் பதிவிட்டுள்ளார்.
சென்னை அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்/
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை பெல்ட்டில் இன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் 31ம் தேதி முதல் மினி குளிரில் தொடங்கி 4 முதல் 5 நாட்களுக்கு இருக்கும்.
சனிக்கிழமை முதல் ஞாயிறு காலை டெல்டாவிலிருந்து நல்ல மழை பெய்யும். சில இடங்களில் தனிமைபடுத்தப்பட்ட கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று இரவு மற்றும் சனிக்கிழமை மாலை வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்