ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  இன்று மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வரும் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது,  77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி தரப்பினரும், பாஜகவினரும் வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு  மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. –  வேட்பாளர்கள் தங்களது சின்னத்தில் மாதிரி வாக்களித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்களிக்கும் போது ஓட்டு தங்களுக்கு விழுகிறதா அல்லது மாற்றி ஏதாவது விழுகிறதா என சோதனை செய்யும் வகையில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில்,  280 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. அதில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.