ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசை : கேடி குஞ்சுமோன் அறிவிப்பு

Must read

ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசை : கேடி குஞ்சுமோன் அறிவிப்பு

பிரபல இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான  படம் கடண்டஹ 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   இந்த படத்தை ஏஆர் ரகுமான் இசையில் கே டி குஞ்சுமோன் தயாரித்தார்.  இந்த படம் பலரைக் கவர்ந்த மிகவும் வெற்றிப்படமானது.    படத்தின் பாடல் கள் பலராலும் புகழப்பட்டது.

இந்த படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு கேடி குஞ்சுமோன் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவித்தார்.  ஜென்டில்மேன்2 படத்துக்கு ஒரு பிரபல இசையமைப்பாளர் இசை அமைக்க உள்ளதாகவும் இதைச் சரியாகக் கண்டுபிடித்தால் தங்கக் காசுகள் பரிசளிக்கப்படும் எனவும்  குஞ்சுமோன் தெரிவித்தார்.

தற்போது கேடி குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.    பழம்பெரும் இசையமைப்பாளரான கீரவாணி சமீபத்தில் வெளியாகி உள்ள பாகுபலி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

More articles

Latest article