தமிழக பொறுப்பு ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு!

Must read

சென்னை,
மிழக ஆளுநருடன் (பொறுப்பு) எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று மாலை திடீரென சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையா பதவி காலம் முடிந்து சென்றதும், பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர்ராவ் பதவியேற்றார்.
தமிழகத்தில் உள்ள தற்போதைய சூழ்நிலை மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து இன்று காலை வைகோ ஆளுநரை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடம் அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்டது.
stalin
அதைத்தொடர்ந்து இன்று மாலை தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க அனுமதி பெறப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில், சட்டமன்ற குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமியும் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்ட மன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.

More articles

Latest article