தமிழகத்தின் முதல்வரானார் மு.க.ஸ்டாலின்… ஆளுநர் பதவி பிரமாணம் செய்தார்..

Must read

சென்னை: திமு தலைவர் மு.க.ஸ்டாலின் 33 அமைச்சர்களுடன்  நாளை காலை சரியாக  9.10  மணிக்கு முதல்வராக பதவி ஏற்றார். முதன்முதலாக மாநில முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவிஏற்றனர். அவர்களுக்கும் கவர்னர்  பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஸ்டாலின், அவர்களிடம் அமைச்சரவை சகாக்களை அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.தொடர்ந்து பதவி ஏற்பு விழா தொடங்கியது.

முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஸ்டாலின் மனைவி உள்பட அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

33 அமைச்சர்களுடன் முதல்வராக நாளை காலை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்…

More articles

Latest article