சென்னை: திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை காலை 9 மணிக்கு பதவி ஏற்க உள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலின் குடும்பத்தினர் , மு.க.அழகிரி குடும்பத்தினர், உள்ளபட அனைத்துக்கட்சி தலைவர்கள்,  எம்.பி.க்கள் வருகை தந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நிதிமன்ற நீதிபதிகள், பல நாடுகளின் தூதரர்கள், முக்கிய அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் உள்பட திமுக எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வருகை தநத்னர்.  மேலும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான  வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்பல பலர் வந்துள்ளனர். மேலும் வைரமுத்து உள்பட முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் சரத்குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, அதிமுக சார்பில் ஓபிஎஸ்,தனபால் உள்பட பலர் வருகை தந்துள்ளனர்

தமிழக காங்கிரஸ கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டு ராவ் , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் குடும்பத்தினர், அவரது  அண்ணன் முக அழகிரி அவர்களின் புதல்வர் துரை தயாநிதி மற்றும் மகள் கயல்விழி பங்கேற்றுள்ளனர்.

ர்