ஸ்வால்

மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது.

மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,

“நாட்டின் முதல் மாநிலமாக 100 சதவீதம் எழுத்தறிவு பெற்று மிசோரம் சாதனை படைத்துள்ளது. மாநில மக்களுக்கு வாழ்த்துகள். நாம் நாட்டில் முதலிடத்தில் இருப்பதில் பெருமைப்படுகிறோம்.

மேலும் சிறந்தவர்களாக இருக்க நாம் பாடுபடுவோம். இந்த அறிவிப்பு கற்றல் மற்றும் அதிகாரமளிப்பின் ஒரு புதிய அலையைத் தூண்டட்டும். ஒரு புத்திசாலித்தனமான, வலுவான மற்றும் ஒன்றுபட்ட மிசோரத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்:

என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தபோது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.