ஆர்யா தயாரித்த ’அமரகாவியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.

கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார் மியா.

தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் கர்ப்பமான விஷயத்தையோ அது சம்மந்தமான படங்களையோ இதுவரை சமூக வலைதளங்களில் பகிராமல் இருந்த மியா தற்போது குழந்தையுடன், தானும் தனது கணவரும் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘லூகா ஜோசப்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/meet_miya/