சர்வதேச அளவில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் பெண் மிதாலி ராஜ்!

Must read

உலக அரங்கில் 200வது ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

mithaliraj

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44 ஓவா்களில் 149 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி ஷா்மா 52 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச அளவில் தனது 200வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளாா். சர்வதேச அரங்கில் 200வது ஒருநாள் போட்டியை விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனையை மிதாலிராஜ் படைத்துள்ளாா். இதுவரை இந்திய மகளில் நி 263 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் மிதாலி ராஜ் சுமார் 200 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 51 அரைசதங்களை மிதாலி ராஜ் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article