துரை

துரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் தாயார் ருக்மணி  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்து அறநிலையத்துறை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.  இதையொட்டி மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி மதுரை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபரான பி.கே.எம். செல்லையா, ருக்மணி பழனிவேல் தியாகராஜன், அரசரடி பகுதியைச் சேர்ந்த மீனா அன்புநிதி, கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான சீனிவாசன், மதுரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

30 நாட்களுக்கு முன்பு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தற்போது அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில்  ருக்மணி பழனிவேல் ராஜனை அறங்காவலர் குழு தலைவராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.