சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்!

Must read

சென்னை,

மிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு,

உத்திரமேரூர் எம்எல்ஏ., சுந்தரின் மின்சாரம் பற்றிய  கேள்விக்கு, மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பதிலில், திருமுக்கூடல், உத்திரமேரூரில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும், கிள்ளியூர் தொகுதி கருங்கலில் 230 கி.வாட் துணை மின்நிலையம் அமைக்க பரிசீலனைசெய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

திமுகவை சேர்ந்த வேளச்சேரி எம்எல்ஏ., வாகை சந்திரசேகரன் எழுப்பிய கேள்விக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அளித்த பதிலில், வேளச்சேரியில் பூட்டிக்கிடக்கும் சமூகநல கூடத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், 51 வட்டங்களில் சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  கூறினார்.

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ., அரவிந்த் ரமேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், சோழிங்கநல்லூரில் 100 படுக்கை வசதிகள்கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க திட்டம் உள்ளது என்றும்,

ஈஞ்சம்பாக்கத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், 6 ஆண்டுகளில் 212 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தி.மு.க எம்எல்ஏ. துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலில், காட்பாடி தாலுகாவாக அறிவிக்கப்பட்டால், தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறினார்.

தி.மு.க எம்எல்ஏ., இன்பசேகரனின் கேள்விக்கு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பதிலில், தருமபுரி மாவட்டம் மோட்டூர்மலை ஏரிமலை, அலகாட்டு மலைப் பகுதிகளில் சாலை அமைப்பதுகுறித்து பரிசீலனைசெய்யப்படும் என்று தெரிவித்தார்

More articles

Latest article