சென்னை,
ய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க வேண்டும் இல்லையேல் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிரிவினரும், தஞ்சையில்தான் அமைக்க வேண்டும்  அதிமுகவை சேர்ந்த மற்றொரு பிரிவினரும் சர்ச்சையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை கிடையாது என்று முதல்வர் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால், அது மதுரையில் அமைக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்றைய சட்டமன்ற கேள்வி நேரத்தின்போது, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று கூறினார்.

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

மத்திய அரசு கேட்டு கொண்டதற்கிணங்க, அனைத்து அம்சங்களும் கொண்ட தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை,ஆகிய 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில் தஞ்சை நிராகரிக்கப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியைவிட கூடுதல் அம்சங்கள் கொண்ட பகுதியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

மத்தியக்குழு எடுக்கும் முடிவின்படி எய்ம்ஸ் அமையும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதன் காரணமாக அதிமுகவினரின் சர்ச்சைகளுக்கு முடிவு வைக்கப்பட்டுள்ளது.