விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ஸ்டாலின்

Must read

சென்னை,

ருமானவரி சோதனைக்கு உள்ளான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் முக்கியமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உவியாளர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,
வருமானவரி சோதனைக்கு உள்ளான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும்,  திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் தலைகுனிவை சந்தித்து வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article