கிளம்புது புதிய பூதம்!

Must read

Minister Vijayabaskar bribed to doctor for Jayalalitha’s thump impression

வருமானவரித்துறை சோதனையின் தாக்கம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததுடன் முடிந்துவிடவில்லை… ஜெயலலிதா மரணம் தொடர்பான வேறு பல ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்கான ஆதாரங்களும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்தவற்கான பட்டியல் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரது கை நாட்டை பெறுவதற்காக, அமைச்சர் விஜயபாஸ்கர், பாலாஜி என்ற டாக்டருக்கு ரூ5 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரமும் இதில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலக்கட்டத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பி படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டும். அதற்கு பதிலாக ஜெயலலிதாவிடம் அந்தப் படிவங்களில் கைநாட்டுப் பெறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அந்த கைநாட்டை பெற்றுத் தருவதற்காக, பாலாஜி என்ற டாக்டருக்கு ரூ 5 லட்சம் கொடுத்ததற்கான ஆதராம் தற்போது சிக்கியுள்ளதாம். இது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சப்புகார் மட்டுமின்றி, ஜெயலலிதாவிடம் கைநாட்டு பெறப்பட்ட போது, அவர் உயிருடன் இருந்தாரா என்பது உள்ளிட்ட அடிப்படையான கேள்விகள் எழுந்துள்ளதால், இதன் விசாரணை வரம்பு விரிந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

 

More articles

Latest article