சென்னை:

மிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி தெருவிளக்கு அமைப்பதில் ரூ.1811 கோடி ஊழல் செய்திருப்பது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

வேலுமணி

ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, உள்ளாட்சி துறை விதியை மீறி டெண்டடர்கள் விடப்படுவதாகவும், இதில் கோடிக்கணக்கான ரூபாய் நடைபெற்றிருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தெரு விளக்கு  அமைப்பதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,811 கோடி ஊழல் RTI மூலம் அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தின் ஊராட்சி, பேரூராட்சி என பல பகுதியில் தெரு விளக்குகள் அமைப்பது, கேபிள்கள் தரை இணைப்பு செய்வதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுமார் 1,811 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது சமூக ஆர்வலர் பெறப்பட்டிருந்த  ஆர்.டி.ஐ. மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஆளுநரிடம் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு புகார் அளித்துள்ளார்.