புதுக்கோட்டை

தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

ரகுபதி தனது பேட்டியில்,

“திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி அழைப்பிதழ் அடித்து கவர்னர் மாளிகை வெளியிடுகிறது என்றால், கவர்னரை என்ன தான் செய்ய முடியும்?

வாதத்திற்கு மருந்துண்டு.அவருடைய பிடிவாதத்திற்கு மருந்தில்லை. குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் அது பிய்த்துக் கொண்டே தான் இருக்கும். அதுபோல், தமிழ்நாட்டுக்கு இது கெட்ட நேரம். இதுபோன்ற கவர்னர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.

ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக மோடி உட்பட பாஜகவினர் பேசுகின்றனர். இதே தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டில் பாஜக செயல்பட்டு வருகிறது”

என்று தெரிவித்துள்ளார்.