சென்னை: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும், இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என்.ரவி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் நீதிமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என விமர்சித்தவர்,   ஆளுநரை முதல்வர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் இப்போதைக்கு உறுதியாக கூறமுடியாது என  தெரிவித்துள்ளார்.

‘பழகலாம் வாங்க’: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு…