மதுரை: முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின்போது, மதுரை மாவட்ட அரசு பள்ளியில் கலந்துகொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களிடம் உரையாடியதுடன், ஆசிரியர்களுக்கும் சில ஆலோசனைகளை கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி களில் காலை சிற்றுண்டி வழங்கும் விரிவாக்க திட்டம் ஆகஸ்டு 25ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால், நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கப் பட்டது. மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த காலை உணவு திட்டம் மதுரை மாவட்டத் தில் 420 கிராம ஊராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 949 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கள்ளர் சீர் அமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையி லான என மொத்தம் 52298 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படு கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை முத்தப்பட்டியில் உள்ள மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து மாணவ-மாணவி களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலை வகித்தார். பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரரா கவன், துணை சேர்மன் கார்த்திக் ராஜா மற்றும் சோமசுந்தர பாண்டியன், பாலசுப்பிரமணியன், ஆசைக்கண்ணன், சிறைச்செல்வன், ஊராட்சித்தலைவர்கள் நியாயவதி மலை வீரன் சுரேந்திரன் சக்தி மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து, மதுரை யாதவா கல்லூரி எதிர்ப் புறம் உள்ள சிறுதூர் கோபாலகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டியை வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில், திங்கட்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கேசரி அல்லது ரவா கேசரி சுழற்சி முறையில் ரவா காய்கறி கிச்சடி இது போன்ற பல வகையான காலை உணவு வழங்கப்பட உள்ளது.
விடியோ: நன்றி – சன்டிவி…