ராமேஸ்வரம்: மகாளய அம்மாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோவில் தீர்த்த குளத்தில்அமைச்சர் அன்பில் மகேஸ் நீராடிய காட்சி தொடர்பான போட்டோக்கோள் வைரலாகி வருகிறது. திமுக எம்.பி. ராஜா இந்துக்களுக்கு எதிராக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அன்பில் மகேஸ் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்களில், நீராடியது, ராசாவின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளதற்கு சாட்சி என் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்தில் உள்ள  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்அன்பில் பொய்யாமொழி, அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, மகாளாய அமாவாசையை யொட்டி, மஹாளய பட்சம் தொடங்கி உள்ள நிலையில், தனது முன்னோனர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில், தனுஷ்கோடி சென்று அங்கு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தார். பின்னர்,  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்தவர், அங்குள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினார். தொடர்ந்து,  ராமநாதசாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக எம்.பி., ஆ.ராசா இந்து மதத்திற்கு விரோதமாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் அவதூறாக பேசி வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து திமுக அரசும், டிஜிபி சைலேந்திரபாபுவும் அமைதி காத்து வருகின்றனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ராஜா இடம்பெற்றுள்ள கட்சியை சேர்ந்த திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடியுள்ளார். அமைச்சரின் நடவடிக்கை ராஜாவின் முக்குடைபட்டதற்கு சமம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மனைவி கோவில் கோவிலாக சுற்றி வரும் நிலையில், ராஜாவின் இந்துவிரோத பேச்சு, முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திமுகவில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தும்தானே என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்,  முதலமைச்சருக்கும், அமைச்சர் சேகர்பாபு போல காதுகேட்கவில்லைபோல என பதிவிட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினத்தவரின் வாக்குகளை பெற திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், ஒருபுறம் இந்துக்களுக்கு எதிராகவும், மற்றொருபுறம் இந்து விரோதிகளாகவும் தன்னை வெளிப்படுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விமர்சித்துள்ளனர்.