க்கிம்பூர் கேரி

க்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் லக்கிம்பூர் கேரி மாவட்டமும் ஒன்றாகும்.  இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இதுகுறித்து விசாரணை செய்த சிறப்புப் புலனாய்வு குழு இது திட்டமிட்ட சதி எனவும் சம்பவம் நடந்த இடத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததையும் உறுதி  செய்தது.  இது தொடர்பாகக் கைதான ஆஷிஷ் மிஸ்ரா தற்போது ஜாமீனில் உள்ளார்.

அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை.  தற்போதைய ட் உபி தேர்தல் பிரசாரத்தில் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.  இன்று அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரியில் பன்பீர்பூரில் வாக்களித்துள்ளார்/  அவருக்கு 200 துணை ராணுவப்படை பாதுகாப்பு அளித்துள்ளது.