சென்னை:
பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கால்நடைகளின் தீவனம், பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பால் விலையை உயர்த்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10ஆம் தேதி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தியும் பல்வேறு போராட்டங்களை முன்வைத்து வருகின்றனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து, இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.