சென்னை:

லகம் முழுவதும் உள்ள 60 நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி மாமல்லபுரம் அருகே நாளை தொடங்க உள்ளது. இந்த கண்கட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில் ரஷ்யா நாட்டின் ராணுவ தளவாடங்களும் இடம்பெறுகிறது. இதற்காக தமிழகம் வந்துள்ள ரஷ்ய வீரர்கள்,  மாமல்லபுரம் பகுதியில் உள்ள சாரியாட் ரிசார்ட்டில் தங்கியிருந்தனங

அப்போது, மேக்காராவிகார் என்ற ரஷ்ய வீரர்  அந்த பகுதியில்  கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.

நாளை மாமல்லபுரத்தில் தொடங்கும் ராணுவ கண்காட்சியில் 60 நாடுகள் தங்கள் அரங்குகளை அமைத்து ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்துகின்றன. இதன் காரணமாக  வங்க கடலுக்கு பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்களும் வருகை தந்து அணிவகுத்து நிற்கின்றன.