எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 2ஆம் பாகம் அனிமேஷனில் தயாராகிறது.

டந்த 1977ஆம் வருடம் எம் ஜி ஆர் தயாரித்து நடித்து வெளியான வெற்றிப் படம் உலகம் சுற்றும் வாலிபன்.   அந்தப் படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், நாகேஷ் அசோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.    வெள்ளிவிழா கொண்டாடிய இந்தப் படத்தின் இறுதியில் “விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு”  என ஒரு அறிவிப்பு வரும்.

உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் எம் ஜி ஆர் படமாக்க நினைத்திருந்தார்.    அதன் பிறகு அவர் அரசியலில் தீவிரமாகியதால் அந்தப் படம் தயாரிக்கபடவில்லை.    அத்துடன் முதல்வரானதும் அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

தற்போது வேல்ஸ் பிலிம் இண்டெர்னேஷனல்  என்னும் பட நிறுவனத்தின் சார்பில் எம் ஜி ஆருடன் நடித்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கனேசன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.    அனிமேஷன் முறையில் இந்தப் படம் தயாராக உள்ளது.   இந்தப் படத்தின் தொடக்க விழா வரும் 17ஆம் தேதியன்று சென்னை சத்யா ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.    இந்த விழாவில் எம் ஜி ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர்.