‘எம்ஜிஆர்’: திரைப்படத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி!

Must read

சென்னை,

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை  இன்று  துவக்கி வைத்தார்.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் வாழ்க்கை வரலாறை தமிழக அரசு திரைப்படமாக தயாரிக்க உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு  ‘எம்.ஜி.ஆர்.’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான  தொடக்க விழா இன்று நடைபெற்றது. துணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இந்த படத்தில், எம்.ஜி.ஆர் ஆக வேடமிட்டு சதீஷ்குமார் என்பவர் நடிக்க இருக்கிறார். மேலும் ர் அண்ணாவாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ.ஆர்.தீனதயாளன், முத்துராமன் உள்பட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடிக்க மற்றும் ஜெயலலிதாவாக நடிக்கவும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரிக்கவும்,  ‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் எம்ஜிஆர் படத்திற்கு  திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 (2018)  அன்று வெளியிடப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைப்படத்தை திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article