மேட்டூர்:
ருடம்தோறும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர்  திறக்கப்படவில்லை.
ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆறு பாயும் டெல்டா பாசன விவசாயிகள் சாகுபடிக்கு ஆயத்தமாவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப  இன்று நெல் சாகுபடிக்கு அச்சாரம் போடுவார்கள்.
1சம்பா
ஆனால்,   இந்த ஆண்டு ஆடி18 எனப்படும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாப்படாதது, பொதுமக்களுக்கும்,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் ஏமாற்றமாகவே உள்ளது.  இதனால்  சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஜூன் மாதம் 12ம்தேதி திறக்கப்படும் தண்ணீரால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார் மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கரும், காவிரி கரையோர மாவட்டங்களான திருச்சி,  சேலம், நாமக்கல், திருச்சி பகுதிகளில் 5.10 லட்சம் ஏக்கரும் குறுவை மற்றும் சம்பா சாகுபடி  பயிரிடப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன்ன காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரரும்,  மற்ற மாவட்டங்களில், 50 ஆயிரம் ஏக்கரும் குறுவை சாகுபடி செய்ய இயலவில்லை.

தண்ணீர் குறைவாக காணப்படும் மேட்டூர் டேம்
தண்ணீர் குறைவாக காணப்படும் மேட்டூர் டேம்

அடுத்து ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் நீர் திறந்ததால், டெல்டா மாவட்டங்களில்,  மீதமுள்ள, 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும்,  மற்ற பகுதிகளில் உள்ள 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் செய்ய  நாற்றங்கால் அமைத்து நெல் விதைப்பை  துவங்கலாம் என விவசாயகிள் எதிர்பார்த்துகொண்டிருந்தனர்.
ஆனால்,  மேட்டூர் அணையின்  நீர்இருப்பு,  குறைவாக (23.84 டி.எம்.சி) இருந்ததால் தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அணையில் 53 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையில் தண்ணீர் இல்லாததால், காவிரி கரையோர விவசாயிகள்,  குறுவை சாகுபடி மட்டுமின்றி,  சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
வறண்டு கிடக்கும் காவிரி ஆறு
வறண்டு கிடக்கும் காவிரி ஆறு

ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாததால், காவிரி கரையோர மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி,  13.10 லட்சம் ஏக்கர்  சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குளித்தலை, ஶ்ரீரங்கம், கரூர் மாவட்டங்களிலும் நெல் சாகுபடி செய்வது பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.