சென்னை: சென்னையின் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இன்றுமுதல்  சென்னை ராயப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

 மெட்ரோ பணிகள் காரணமாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பாலம் இடிக்கும் பணி நடைபெறுவதால் 6 நாட்கள் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் CMRL எனப்படும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தனது சேவைகளை துவங்கியது. முதல் முதலில் இந்த சேவை தொடங்கப்பட்ட பொழுது வெறும் 9 கிலோமீட்டர் நீளம் கொண்ட பயணமாக தான் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அது 54 கிலோ மீட்டர் கொண்ட மெட்ரோ ரயில் சேவையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கி விம்கோ நகர் டெப்போ வரை மெட்ரோ ரயில் சேவைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்ட் தாமஸ் மவுண்ட் தொடங்கி விம்கோ நகர் வரை தனியான ஒரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் மாதவரம் பால் காலனி முதல் சிறுசேரி சிப்காட் 2 வரை, சுமார் 45 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 47 நிறுத்தங்கள் கொண்ட மெட்ரோ பாதை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோ  பூந்தமல்லி பைபாஸிலிருந்து, லைட் ஹவுஸ் வரை சுமார் 27 நிறுத்தங்கள் கொண்ட, 26 கிலோமீட்டர் நீள பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதவரம் பால் காலனி முதல் சோளிங்கநல்லூர் வரை செயல்படும் சுமார் 44 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 45 நிறுத்தங்கள் கொண்ட புதிய வழி தடம் அமைக்கப்பட்டு வருகிறது மெட்ரோ.

மெட்ரோ ரயில்கள் அமைக்கும் பணி காரணமாக சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை  மேம்பாலம் இடிக்கப்படுவதால், அந்த பகுதியில் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஆர்.கே சாலை, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பாலம் இடிக்கும் பணி நடைபெறுவதால் ஆறு நாட்கள் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராயப்பேட்டை ஆர்.கே.சாலை 1 Point பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணியினை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 8 நாட்கள் இரவு நேரங்களில் (11.00 மணி முதல் 05.00 மணி வரை) செய்ய சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக 7 நாட்களுக்கு பின்வரும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

அண்ணா மேம்பாலம் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு மற்றும் வி.பி. ராமன் சாலை வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி சாலை நோக்கி செல்லலாம் .

காமராஜர் சாலையிலிருந்து ஆர்.கே.சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வி.எம். தெரு, ஆர்.கே சாலை சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி -வி.எம் தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வலதுபுறம் திரும்பி பி எஸ் சிவஸ்வாமி சாலை (எதிர்திசை ஒரு வழி போக்குவரத்து)- வலதுபுறம் திரும்பி விவேகானந்தா கல்லூரி சந்திப்பு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி நீல்கிரிஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக சென்று – அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

TTK சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமியில் சந்திப்பு TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

பி எஸ் சிவஸ்வாமி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் நீல்கிரிஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று – இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு. வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக இடதுபுறம் திரும்பி – காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

லஸ் ஜங்ஷன்  முண்டக்கன்னியம்மன் கல்விவாரு தெருவில் இருந்து ராயப்பேட்டை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி எஸ் சிவசாமி சாலை இடதுபுறம் திரும்பி நீல்கிரீஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

தினந்தோறும் காலை 05.00 மணிக்கு டாக்டர் ராதகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து சீராக அனுமதிக்கப்படும்.

” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.