சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை இடம்மாற்ற செய்ய தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, அதே பகுதியில்  15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதன்படி, கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை  அருகே மெட்ரோ ரயில் நிலையம், அதன் கீழ், சுரங்கப்பாதை பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக  காந்தி சிலை சேதமடைய வாயப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, அந்த சிலையை அங்கிருந்து அகற்றி, அருகே மற்றொரு இடத்தில் வைக்க  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தற்போது தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலை அடுத்து இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க 90 சதவீத பணிகள் தற்போது காந்தி சிலை அமைந்துள்ள பகுதி அருகே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.