சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் வாட்ஸ் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், பயண அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் லட்சங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 1.15 லட்சம் பயணிகள் அதிகம் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளார்கள் என்றும், பயண அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.90 லட்சம் அதிகரித்திருக்கிறது என்றும் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பயனர்கள், நேரடியாக பயணச்சீட்டு பெறுவது, பயண அட்டை முறை, கியூ.ஆர். கோடு என மூன்று முறைகள் உள்ளன. இந்த நிலையில், பயணிகள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் ஆப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் புதிய வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய அதிகாரிகள், இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைபேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு ஹாய் (Hai) என வாட்ஸ் ஆப் செய்தால் சாட் போர்டு திறக்கும். அதில், பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேர வேண்டிய இடம் உள்ளிட்டவற்றை அதில் பதிவு செய்து பின்னர் வாட்ஸ் ஆப் மூலமோ அல்லது மற்ற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, பயணிகளுக்கு பயணச்சீட்டு வாட்ஸ் ஆப்-ல் அனுப்பப்படும். அதனை ரயில் நிலையத்தில் முன்னுள்ள டிக்கெட் ஸ்கேனரில் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]